கடந்த வாரம், முழுக்க என்னைக் கிறுக்கனாக்கி விட்டார்கள். பெங்களூர் வந்ததிலிருந்தே எக்கச்சக்க குழப்பங்கள். மூன்று மாதங்களுக்கு முன், அலுவல் ரீதியாக வெளிநாடு செல்ல வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டது. பின் சொதப்பியது. எனக்கு அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை. பின், இந்தமுறை மும்பை (எ) பாம்பே செல்ல வேண்டும் எனச் சொல்லப்பட்டது. பின் அதுவும் இல்லை என்றார்கள். மூன்று, நான்கு முறை ஆமாம், இல்லை எனப் பலவாறாகச் சொல்லிச் சொதப்பி, கடைசி நேரத்தில், அதாகப்பட்டது திங்கட்கிழமைப் பயணத்துக்கு முந்தின வியாழக்கிழமை விமானச்சீட்டை பதியச் சொன்னார்கள். என் அலுவலகத்தில் பதிந்துவிட்டார்கள். இதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், சனி ஞாயிறு நான் என் ஊருக்குத் திருவிழாவுக்குச் சென்று வர வேண்டும். இதற்குமுன் இரண்டு மாதங்களாக ஊருக்குச் செல்லவே இல்லை. திங்கள் காலை 7.10 க்கு விமானம். எனவே நான் மாலை 4 மணிக்காவது என் ஊரிலிருந்து கிளம்ப வேண்டும். இல்லையேல், விமானத்தைப் பிடிக்க முடியாமல் போகலாம். திருவிழாவன்று நான் அங்கிருக்காமல் கிளம்பினால், வீட்டில் எல்லோருக்கும் கோபம் வராதா என்ன? அதனால் இங்கிருந்து யாரிடமும் சொல்லவில்லை. வீட்டிற்குப் போய் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். அது நல்ல பலனைத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும். யாரும் கோபப்படவில்லை. அதனால் தான் இந்த கம்பெனிக்காரன்களும். தன் வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்துப் பேசுகிறார்கள். மின்னஞ்சலில் காட்டிய காட்டத்தை, நேரில் பார்க்கும் போது, வெளிக்காட்ட முடிவதில்லை.
ஊரில் இரண்டு நாட்களும் நிதானமாகப் போயின. சனிக்கிழமை, நீண்ட நாட்களுப்பின் திண்டுக்கல் காய்கறிச் சந்தைக்குப் போனேன். அடுத்தநாள் பிரியாணிக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தேன். அடுத்தநாள் விழாவுக்குச் சென்று வந்தபின், பெங்களூரு கிளம்பினேன். இடையில் சேலம் வந்து ரஞ்சித்தைப் பார்த்து, இருவரும் டீக்கடைக்குப் போய்விட்டு நான் பெங்களூருக்கும் அவன் சென்னைக்கும் கிளம்பினான். அதிகாலை 2.30க்கு மடிவாலாவில் இறங்கினேன். அங்கிருந்து அறைக்கு 1கிலோமீட்டர் இருக்கும். அந்தநேரத்தில் நடந்து செல்ல வேண்டாமென்றெண்ணி, ஆட்டோவைக் கேட்டால், அவன் 100 ரூபாய் கேட்டான்.
நான், 'ஆரஞ்சு பேக்கரிக்கு 100 ரூ. முடியாது. நா நடந்து போய்க்கிறேன். வேணாம் விடுங்க.'.
'சரி சரி. 90 குடுக்கோ சார். நைட் டைம், நீங்க வேற பாவம் சார்'.
'அண்ணே, 1 கி.மீ. கூட இல்ல. 60 ரூ. தரலாம். லேட் நைட்டுங்கறதுனால வேணா 70 தருகிறேன்' - (என் அலுவலகம் 3 கி.மீ. அதுக்கே 60 தான் அதிகபட்சம் தரவோம்.)
'80 ரூபா குடுங்கோ.. சார்'
'இல்லண்ணே'
'அதெல்லாம் தரலாம் சார். வாங்க வாங்க'
'எழுபது ரூபாய் தான் தருவேன்'
ஏறிவிட்டேன். இறங்கியதும், 70 ரூ. கொடுத்தேன்.
'அப்போ 70 ரூ. தான் தருவீங்களா?'
'அதத் தான சொன்னேன்'
'அப்போ இந்தா, இன்னும் 20 ரூ தரேன். அதையும் வாங்கிட்டுப் போ'. இப்படிக் கேட்டால் இன்னும் தொகை தருவேன் என்று நினைத்துக் கேட்டான்.
'வாங்க போங்க' என்பது 'வா போ' - வுக்கு மாறியிருந்தது. அவன் கேட்ட அடுத்த விநாடி, நான் 'அதெல்லாம் வேணாம். போங்க. ஆனா, நான் இப்போ அந்த 20 ரூபாயையும் வாங்கிட்டா, என்ன பண்ணுவீங்க?'. அவன் முகம் கடுகடுவென மாறியது. அதை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும் வண்ணமாக, அவனைப் பார்த்து சிரித்து வைத்து விட்டு வந்து விட்டேன். ஆட்டோ மிக வேகமாகப் கிளம்பிப் போகும் சத்தம் கேட்டது.
வீட்டில் வந்து, தூங்கினால் கட்டாயம் காலை விமானத்தைப் பிடிக்கமாட்டேன். எனவே. தூங்காமலேயே 4.30 க்கு ஓலா வண்டி வரும் வரை, ஒருவாரத்திற்குத் தேவையான துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தேன். பின், வண்டியில் ஏறி, விமான நிலையம் போனேன். முதல்முறையாக பயணிக்கப் போகிறேன். என்ன என்ன தேவை என்று எண்ணிக் கொண்டே இருந்தேன். போர்டிங் பாஸ் பிரிண்ட் எடுக்கவில்லை. அதனால் உள்ளே போவதில் எதும் பிரச்சினை இருக்குமோ என்று பயந்து கொண்டேயிருந்தேன். இதற்கு முன் ஒரே ஒருமுறை மட்டும் சென்னை விமான நிலையத்திற்குப் போயிருக்கிறேன். முதலில் வாசலில் ஒரு ராணுவ காவல் வீரர், பயணச் சீட்டையும் அடையாள அட்டையையும் சோதித்த பின் என்னை உட்புக அனுமதித்தார். பின் உள்ளே சென்றபின் தான, அங்கேயே போர்டிங் பாஸ் எடுத்துக் கோள்ள முடியும் என்று. என்னுடன் வேலை செய்பவர் வந்தார், அவர் தான் இதையெல்லாம் காட்டினார். பின் என் துணிப்பையை லக்கேஜ் செக்சனில் தள்ளிவிட்டு, செக்கியூரிட் பகுதிக்குப் போனேன். மெட்டல் டிடெக்டர் வைத்து என்னையும், என் மடிக்கணினிப் பையை ஸ்கேனரிலும் சோதித்த பின் விமானம் ஏறும் பகுதிக்குப் போனேன். முழு வெள்ளைப் பகுதி, சுத்தம் சுத்தம். முற்றிலும் வாசனையற்ற பகுதியாகப் பட்டது. பொதுவாக ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பட்ட வாசனை ஒன்று உள்ளதாக எனக்குத் தோன்றும். திருச்சி - நீர் வாசனை(பாசி வாடை அல்ல, நீருக்கென்று குளிர்ச்சியூட்டும் வாடை ஒன்று நான் மட்டும் அறிவேன்.), திண்டுக்கல், மதுரை - வெயிலோடு சேர்ந்த, வெங்காய வாடை, இப்படி. பெங்களூரின் விமான நிலையத்துக்கு அப்படி எதையும் அறியமுடியவில்லை. என்னோடு அலுவலகத்திலிருந்து மூன்று பேர் வந்திருந்தனர். அவர்களை முன்னுக்கு விட்டு, அவர்கள் எங்கெல்லாம் போய் என்னவெல்லாம் செய்கிறார்களோ அதையே நானும் செய்தபடி, அவர்களுக்குப் பின்னாலேயே சென்று கொண்டிருந்தேன். 7.10 மணிக்கு விமானம். நேரத்திற்கு வந்தது. விமானம் வாசலிலிருந்து தொலைவாதலால், பேருந்து ஒன்று எங்களை அழைத்துப் போனது.
விமானத்தின் முன்னால் போனதும் தான் கவனித்தேன், அது அவ்வளவு ஒன்றும் பளபளப்பாகவெல்லாம் இல்லை. சில இடங்களில் வண்ணப் பூச்சு உரிந்து காணப்பட்டது, மெல்லிய சொட்டை சொட்டையாக. இரண்டு வாயில்கள் இருந்தன, முன்னால் ஒன்றும் பின்னால் ஒன்றும். இரண்டுக்கும் தற்காலிக படிக்கட்டுகள் வந்து நின்றிருந்தன. அப்படிக்கட்டுக்கள் டிராக்டர் அல்லது ஜீப் மூலம் இழுத்துவரப் பட்டன. விவசாயத்திற்கு அடுத்து இங்குதான் டிராக்டர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன போலும். என் இருக்கை 27A, ஆன்லைனில் இதை புக் பண்ணியிருந்தேன். விமானத்தின் இடப்புறம் கொஞ்சம் போல பின்னால் அமைந்திருந்தது. அதனால், பின் படிக்கட்டில் ஏறினேன். விமானப் பணிப்பெண்கள் எப்படி இருப்பர் என்று பார்க்கும் ஆர்வம் வேறு. ஏறும் முன் என் ஃபோர்டிங் பாஸை சோதித்த பின், அதன் கடைசி நுனியில் அலுவலகப் பயன்பாட்டிற்கான பகுதியை கிழித்து வைத்துக் கொண்டபின் என்னை ஏற அனுமதித்தனர். இது கிட்டத்தட்ட நாம் தியேட்டர் நுழையும் முன் நடப்பதைப் போல இருந்தது. மேலேறினேன். விமானப் பணிப் பெண்கள் இருவர், 'வெல்கம் சார்' என இன்முகத்தோடு வரவேற்றனர். பதிலுக்கு நான் பல் தெரியாமல் மட்டும் சிரித்து, தலையை அசைத்து ஆமோதித்தேன். பல் தெரியாமல் சிரித்தால் தான் காசுள்ளவன் எனப் பொருள் படுமாறு என் மனம் பழக்கப்பட்டிருந்தது. அவர்களின் முகங்களை சொற்ப நொடிகள் தான் பார்த்திருப்பேன். ஆனாலும், துல்லியமாக என்னால் நினைவு கூற முடிவது எனக்கே ஆச்சரியம் தான். பின்னோக்கி இழுத்து வாரப்பட்ட தலை. அழுத்தமாகவும் திடமாகவும் இடப்பட்ட உதட்டுச் சாயம் - அதன் பின், எப்போது விமானப் பணிப்பெண் என்ற சொல்லைக் கேட்க நேர்ந்தாலும் இந்த சாயம் தான் எனக்கு முதலில் ஞாபகம் வந்து தொலைக்கிறது. இறுக்கமான கறுப்பு நிற உடை. தலையில் குல்லாவெல்லாம் இல்லை. நேர்த்தியாகக் கொண்டையிட்டிருந்தார்கள். ஆடை கழுத்து முதல் முழங்கால் வரை இருந்தது. இதைத் தவிர பெரிய வித்தியாசமாகவெல்லாம் அவர்கள் தெரியவில்லை. ஏனெனில் பெங்களூரில் 80-90 விழுக்காடு பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அப்படியும் யாரேனும் இல்லை என்றால் அவர்கள் பெரும்பாலும் தமிழ்ப் பெண்களாக இருப்பார்கள். அதனால், அவர்களின் முகப்பூச்சும் உதட்டுச் சாயமும் ஆச்சரியமளிக்கவில்லை. கால்களில் டிரான்ஸ்பரன்ட் உறை அணிந்திருப்பார்கள் என்று நினைத்திருந்தேன், என் நண்பன் ஒருவன் அப்படித்தான் சொல்லியிருந்தான். ஆனால், இல்லை, வெறும் காலுடன் தான் இருந்தனர். வட்ட முகக்காரி ஒருத்தி, நீண்ட முகத்துக் காரி ஒருத்தி. வட்ட முகத்துக் காரியின் முழங்காலில், உதட்டுச் சாயத்தின் சிறு தீற்றல் இருந்தது, முகத்திலிருக்கும் திருநீறு அளவுக்கு. அங்கு ஏன் பார்த்தேன் என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். பெண்களைப் பார்த்த சில நொடிகளுக்குப் பின் நான் தலையைக் கீழே போடும் பழக்கம் உள்ளவன் நான். அப்போது சிக்கியது அது. நுழைவாயிலைக் கடந்து, உட்புகும் போது, 'என்னடா பண்ற' என்று அட்சர சுத்தமாக அந்த வட்டமுக விமானப் பணிப்பெண் பக்கத்தில் இருந்த பணிப்பையனைக் கேட்டாள். அது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. முகம் தமிழ் முகம் இல்லை. பேச்சு மட்டும். திரும்பிப் பார்க்க எண்ணினேன், ஆனால் பார்க்கவில்லை.
பின், என் இடத்தை கண்டுபிடுத்து சென்று அமர்ந்தேன். ஜன்னல் ஓர இருக்கை. இருக்கை ஒன்றும் சொகுசாவெல்லாம் இல்லை. தமிழ்நாட்டில் ஓடும், தாழ்தளப் பேருந்தில் இருப்பதைப் போன்ற இருக்கைகள். நான் அமர்ந்த பின், பெல்ட்டை ஒருமுறை அணிந்து பின் அவிழ்த்தும் பார்த்துக் கொண்டேன். கிளம்புவதற்கு, பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு முன், எப்படி பெல்ட் அணிய வேண்டும்? அவசர நேரத்தில் என்னவெல்லலாம் செய்ய வேண்டும்? என ஒரு பெண் ஒலி பெருக்கியில் சொல்ல, அதை இந்த வட்டமுகக்காரி நடித்துக் காட்டிக் கொண்டிருந்தாள். விமானம் கிளம்பத் தயாரானது. நான் ஜன்னலையே உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். ஒரு ஓட்டத்திற்குப் பின், மழையில் நனைந்த பறவை தன் சிறகைக் குலுக்குவது போல், விமானம் தன் இறக்கையின் பின் பகுதியை லேசாக, மேலும் கீழும் அசைக்க, விமானம் மேலே ஆகாயத்தின் மீதேறியது. அப்போது என் பிருஷ்டத்தை யாரோ பின்னிருந்து தள்ளுவது போல் இருந்தது. இன்னும் சொல்ல வேண்டுமானால், ஊஞ்சலில் ஆடும் போது முன்னுச்சத்தைத் தொடும் போது இருப்பது போலவும், ராட்டினத்தில் சுற்றும் போது முன்னுச்சத்தைத் தொடுவதும் போலவும் இருந்தது. ஜன்னலின் வழியே, வெளி உலகம் தூரமாய்ச் சென்று கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மேகக் கூட்டத்தினுள் புகவும், கீழே எதுவும் தெரியவில்லை. ஆனால் குவியல் குவியலாய் தென்பட்ட குட்டிக் குட்டி மேகக் கூட்டங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது சோப்பு நுரை வைத்து விளையாடும், குழந்தைக்கு ஒப்பான உவகை கொண்டேன். அதன் பின் எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை. விமானம் மும்பையில் தரை இறங்கிய பின் தான் விழித்தேன்.
மும்பை மேக மூட்டத்துடன் இருந்தது. என் லக்கேஜை, கன்வேயர் பெல்ட்டில் அணிவகுப்பு செய்து கொண்டிருந்த மூட்டைகளில் அடையாளம் கண்டு, எடுத்து வந்தபின் வெளியேறும் வழி வழியே வந்தோம். அங்கே 'IGate Welcomes IR' என்ற அட்டையுடன் ஓட்டுநர் இருந்தார். அவரை வண்டியை எடுத்து வரச் சொல்லிவிட்டு, துரிதமாக காலை உணவை முடிக்க, விமான நிலையத்தில் இருந்த உணவகத்தில் அமர்ந்தோம். மினி இட்லி மற்றும் வடை வாங்கினோம். மினி இட்லி சாம்பாரில் மிதந்து கொண்டு வந்தது, பணியாரத்தை விட சின்னதாக. மும்பை வந்துவிட்டோம் இனி இனிப்பான சாம்பார் இருக்காது என்று நினைத்த என் நினைப்பில் மண். பெங்களூரில் போடுவதை விட அதிக இனிப்பு சேர்க்கப்பட்டிருந்தது. உண்டு முடித்து, காரில் ஏறி அலுவலகம் சென்றோம். மாலை தான் விடுதிக்குப் போவதாகத் திட்டம்.
அலுவலகத்தில் பயங்கர உபசரிப்பு. எங்கள் அலுவலகத்தில் கிளையண்ட் வந்தால் நாங்கள் என்னவெல்லாம் செய்வோமோ அதெல்லாம் எங்களுக்குச் செய்யப்பட்டது. ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை அலுவலக உதவியாளன் 'டீ வேண்டுமா?' என்று கேட்ட வண்ணம் இருப்பான். அவர்கள் செய்திருக்கும் வேலையில் எங்களுக்கு இருக்கும் சந்தேகம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் இந்த ஒரு வார பயணத்தின் நோக்கம். 'அது அதுபாட்டுக்கு' ஓடிக்கொண்டிருந்தது. எல்லா நாட்களும் மதிய உணவு அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சூப்பு, ரொட்டி, காய்கறிக்கூட்டு, சோறு வகை ஒன்று(வெண்ணைச் சோறு, வெஜிட்டபுள் சோறு இப்படி), பருப்பு, கோழி குருமா, இன்னும் இருவகைக் கூட்டுகள் பின் இறுதியாக இனிப்பு வகை ஒன்று(குளோப் ஜாமூன், ரசகுல்லா, ரசமாலய்). எல்லா மேசைகளிலும் கொக்ககோலா டின்(சாதாரண மற்றும் டயட்)கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் இருந்தன.
மாலைகள் தான் நான் வெளியே சுற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். முதல்நாள், மாலை விடுதிக்கு வரும்போதே உணவை முடித்துக் கொண்டோம். வடபம் மற்றும் கோல்கபா உண்டோம். கோல்கபா என்கிற பண்டத்தைத் தான் பானிபூரி என்று அழைக்கிறோம். அறைக்கு வந்து பையை வைத்துவிட்டு, வெளியே செல்லலாம் என்று எண்ணி, வெளியே கிளம்பினோம் நானும் இன்னொருவரும். பக்கத்தில் ஒரு மால் இருந்தது. அங்கு சென்று சுற்றிப் பார்த்து விட்டு, அடுத்த நாள் வந்து, என் அண்ணன் மகனுக்கு என்று சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று நினைத்து அறைக்கு வந்து தூங்கினேன். அதன் பிறகு எங்களுக்கு சுத்தமாக நேரமே கிடைக்கவேயில்லை. இரவு 10.30 மணிக்கு மேல் தான் அறைக்கு வந்து சேரவேண்டிதாய்ப் போனது. அதனால் பிந்தய நாட்கள் ஒன்றில் கூட நாங்கள் வெளியே சுற்றவேயில்லை.
விடுதியைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அட்டகாசமான அறை. 5000 நாள் ஒன்றுக்கு. பல்துலக்க, குளிக்க தேவையான பொருட்கள், ஷூ பாலிஷ், மைக்ரோ வேவ் அவன், சின்ன ஃப்ரிட்ஜ், தொலைக்காட்சி, என மிக சொகுசான அறை. முக்கியமாக என்னைக் கவர்ந்த விஷயம், 'குளியலறையில் இருந்த குளிக்கும் தொட்டி'. சித்தார்த் நடித்த 'எனக்குள் ஒருவன்' படத்தில் அவன் ஆவிபறக்கும் தண்ணீரில் அப்படி ஒரு தொட்டியில் அமர்ந்து குடித்துக் கொண்டிருப்பான். அது என்னைப் பெரிதும் கவர்ந்திருந்தது. குடிக்க முடியாவிட்டாலும், அதுபோல தொட்டியில் படுத்துக் கொண்டு குளித்தேன். மும்பையில் குளிர் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதனால் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க சுகமாகவே இருந்தது. குறைந்தபட்சம் முக்கால் மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை அதில் தினமும் காலை படுத்துக் கிடந்தேன்.
காலை உணவைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். நான் தங்கியிருந்த விடுதியில் காலை உணவு மட்டும் இலவசம். நான்கு நாட்கள் உண்டேன். ஒருநாள் கூட உணவின் சுவையில் சிறிது கூட மாற்றம் காணமுடியவில்லை. இட்லி(காஞ்சிவரம் இட்லி என்று கூட ஒன்று ஒருநாள் வைக்கப்பட்டது), சாம்பார் (இது மட்டும் இனிப்பு கலக்காமல் கிடைக்கவேயில்லை.), போண்டா, உப்புமா, தண்ணிர்ப் பழச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு, இருவகை மில்க் ஷேக், வெஜ் நூடுல்ஸ், பேக்கன் (இதை மட்டும் நான் ஒருநாள் கூட தவற விடவேயில்லை.), சிக்கன் உருண்டை வகை ஒன்று, பன்றிக்கறி வகை ஒன்று, இலையைப் போல தடிமன் அளவில் சிக்கன் வகைகள் இரண்டு, உலர் திராட்சை, குளிர்விக்கப் பட்ட தயிர், பழ வகைகள், பிரட் வகைகள் இரண்டு, மற்றும் இன்னும் சிலற்றை விட்டுவிட்டேன். இவை எல்லாவற்றையும் நிச்சயம் ஒரே நாளில் உண்ணவியலாது. ஆக, நாள் ஒன்றுக்கு சில வகைகள் எனப் பிரித்து , எல்லாவற்றையும் சுவை பார்த்துவிட்டேன். அப்புறம் ஒருநாள், இரவுணவுக்காக 'village' என்றொரு உணவுவிடுதிக்குப் சென்றோம். அது ஒரு மாலில் இருந்தது. அதன் மேற்கூரை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. கிறிஸ்மஸ் தாத்தாவின் குல்லாவின் உட்புறம் போல இருந்தது. நாங்கள் தேடிய உணவு விடுதி நான்காவது மாடியில் இருந்தது. உள்ளே நுழையப் போனபோதுதான் கவனித்தேன், அதன் தோற்றம் முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. ஒரு வட இந்திய கிராமம் போல உருவாக்க முயற்சித்திருக்கிறார்கள். சிவப்பும் ஆரஞ்சும் ஆதிக்கம் செலுத்தும் வண்ணப் பூச்சுக்கள் மிகுந்திருந்தன. சேட்டுக் கடை கல்லாப் பெட்டி போல இருந்த முகப்பில் உணவுக்கான கூப்பன் வாங்குமாறு அறிவுறுத்தப் பட்டோம். தலை ஒன்றுக்கு 400 ரூபாய். நால்வரும் வாங்கிக் கொண்டு உட்புகுந்தோம். தாபா செட்டப் போல இருந்தன உணவு மேஜைகள். மூங்கில் நாற்காலிகள் ஒருபுறமும் உருண்டைத் தலையணையுடன் கூடிய படுக்கை ஒருபுறமுமாக மேஜையைச் சுற்றிப் போடப்பட்டிருந்தது. உணவு வகைகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. தாறுமாறு. ரொட்டியை ஆட்டுக்கறி மசாலாவை ஊற்றிச் சாப்பிட்டேன். அதிதூய சுவையுடன் இருந்தது. ரஞ்சித்தின் அம்மா செய்திருப்பதைப் போன்ற கெட்டித் தன்மையும் கொஞ்சம் போல் காரமும் அதிகம் சேர்க்கப்பட்ட உன்னதமான கெட்டியான குழம்பு. இப்போது நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது. நன்கு சாப்பிட்டேன். இன்னொருநாள் வேறொரு உணவு விடுதிக்குச் சென்றோம். நான்கடி நீளமுள்ள தோசையும் ரொட்டிகளும் ஆர்டர் செய்தோம். கல்லில் போட்டுச் சுட்ட ரொட்டி அல்ல, நெருப்பில் போட்டுச் சுட்ட ரொட்டி. கடிப்பதற்கு கொஞ்சமல்ல ரொம்பவே கஷ்டப் பட்டேன். தோசைக்கான சாம்பார் மறுபடியும் இனிப்போடு வந்து சேர்ந்தது.
மும்பையின் நிலத்தையும் மனிதர்களையும் பற்றிச் சொல்ல வேண்டும். சாலைகள் அழுக்கான சாலைகளாகவே இருந்தன. நான் இருந்தது, 'வாசி' என்ற இடம் இது மும்பையின் புறநகர்ப் பகுதி - நவி மும்பையைச் சேர்ந்தது. நகர்புற மும்பைக்குச் செல்ல நேரம் கிடைக்காததால் அங்கெல்லாம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. நான் பார்த்தவரை, அழுக்கடைந்த, பசுமை நிரம்பிய இடங்கள் தான். வட இந்திய மக்கள் பெரும்பாலும் வெள்ளையாக இருப்பார்கள் என்று நினைத்திருந்த எனக்கு ஆச்சரியம் தான். 70 விழுக்காடு கருப்பு அல்லது அதற்கு நெருக்கமாக இருந்தார்கள். அலுவலகத்தில் எல்லா வட இந்தியர்களையும் போல, எனக்கு இந்தி தெரியாது என்பதை அளவுக்கு மீறிய ஆச்சரியத்துடன் கேட்டார்கள். குறைந்த பட்சம் இரண்டு முறையாவது கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்கள். அதைப் பார்த்தால் எனக்கு அவர்கள் எனக்கு குற்றவுணர்ச்சியை உருவாக்க அப்படிச் சொல்கிறார்களோ என்று கூட நினைக்கிறேன். சென்னையைப் போலவே காலை நேரத்தில் ஓடிக் கொண்டிருந்தார்கள். புறநகர் ரயில் நிலையத்திலும் காலை 8 மணிக்கும் 200-250 க்கும் மேற்பட்டோர் பயணச்சீட்டு எடுக்க நீண்ட வரிசையில் காத்து நின்றுகொண்டிருந்தனர். இங்கேயே இப்படி என்றால் உள்ளே எப்படி இருக்கக் கூடும் என்று கணக்கிட்டுக் கொண்டேன்.
இப்பயணம் பெரிதாக வெளியிடங்களைச் சுற்றப் பயன்படவில்லை. கிட்டத்தட்ட சாப்பாட்டுப் பயணம் போலவே போனது. கடைசிநாள், மீண்டும் விமானம் ஏறும் போது, சிறிய குறுகுறுப்பு இருந்தது. ஏனெனில் வானிலை சரியில்லை என 30 நிமிடம் தாமதமாக கிளம்பியது. இடையில் 6-7 இடங்களில் விமானி பெல்ட்டை அணிந்து கொள்ள அறிவுறுத்தினார். அதன்பின் விமானத்தின் உள்ளே சிறுசிறு குலுக்கல்கள் இருந்தன. அப்போதெல்லாம் சின்னதாக பயம் எட்டப் பார்த்தது. ஒருவழியாக வெள்ளி இரவு 11.40ஐப் போல வீடு வந்து சேர்ந்தேன். அடுத்தமுறை வட இந்தியா போனால், நிறைய சுற்றிப் பார்க்க வேண்டும்.